You must Sign In to post a response.
  • Category: General

    Education exhibition 2011 _ pondicherry

    புதுவையில் நாளை உயர்கல்வி கண்காட்சி தொடக்கம்

    First Published : 19 May 2011 09:32:40 AM IST

    புதுச்சேரி, மே 18: புதுச்சேரி தொழிலாளர் துறையின் வேலை வாய்ப்பகம் சார்பில் உயர் கல்வி கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
    புதுச்சேரி காந்தி திடலில் நடக்க உள்ள இக்கண்காட்சி மே 20 முதல் 29-ம் தேதி வரை மாலை 6 முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இதை முதல்வர் என். ரங்கசாமி தொடங்கி வைக்கிறார்.
    மாணவ மாணவிகள் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, தொடரவேண்டிய தகுந்த உயர் கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதலை அளிப்பதே இக்கண்காட்சியின் நோக்கம். புதுச்சேரி ஆட்சி பரப்பில் உள்ள எல்லா பகுதிகளிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் 40-க்கும் மேற்பட்ட மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றம் தொழில் முறை நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்க உள்ளன.
    மேலும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை, அறிவியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., நர்சிங், ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் உள்ள பாடப் பிரிவுகளைப் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்ச்சியை இக்கண்காட்சி ஏற்படுத்தும்.
    இதன் மூலம் நேரடியாக கல்லூரிக்குச் சென்று தகவல்களை பெறும் சிரமத்தை பெற்றோர்களும், மாணவர்களும் தவிர்க்கலாம். மேலும் இதன் வாயிலாக மாணவர்கள் திறன் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயன் பெறலாம். இக்கண்காட்சி குளிர்சாதன வசதியுடன் கூடிய வளாகத்தில் நடைபெறும்.
    அந்நாட்களில் புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரிகள் மூலம் இலவச மருத்துவ முகாம் நடத்துவதற்கும் மற்றும் திறன் வாய்ந்த கல்வியாளர்கள், வல்லுனர்களின் தொழில் முறை வழிகாட்டுதல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை வேலைவாய்ப்பக அதிகாரி அனிதா தெரிவித்துள்ளார்.
  • #4100
    hai friend.,

    The Information very important for this time thanks to post this information.many people don't have a good knowledge about the higher studies.

    Regards
    Maiyappan @ Tamil
    Enjoy Every Second In Life


This thread is locked for new responses. Please post your comments and questions as a separate thread.
If required, refer to the URL of this page in your new post.